ஐபில் கிரிக்கெட் சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல் : வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி  – Kumudam

Spread the love

18-வது ஐபில் சீசனில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. 19-வது சீசன் முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியுடன் துவக்கியுள்ளது. கவுகாத்தியில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 127 ரன்னில் அடங்கியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி  தோல்வியை தழுவியது.

சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே உள்ளிட்டோர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . மூத்த வீரர் டோனி பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த போட்டியிட் ஆடவில்லை. இன்றைய ஆட்டத்திலும் அவர் விளையாட மாட்டார். நேற்றைய தினம் சிஎஸ்கே வீரர்களுக்கு அவர் பயிற்சியின் போது ஆலோசனைகளை வழங்கினார்.

தசைப்பிடிப்பால் முதல் ஆட்டத்தில் ஆடாத அதிரடி ‘ டிவால்ட் பிரேவிஸ் நேற்று பயிற்சி மேற்கொண்டார். ஆனாலும் இன்றைய போட்டியில் ஆடுவது சந்தேகம் தான். சேப்பாக்கத்தில் இன்று  நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி  வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. 

இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு மோதியுள்ளன. இதில் இரு அணியும் தலா 16-ல் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில் சென்னை மைதானத்தில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்த 9 ஆட்டங்களில் 4-ல் சென்னையும், 5-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *