ஐயப்ப பக்தர்களுக்கு நாளை முதல் பாயாசம், அப்பளத்துடன் மதிய உணவு : சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு   – Kumudam

Spread the love

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள்  சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஐயப்ப பக்தர்களுக்கு புலாவ் மற்றும் சாம்பார் சாதம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த மதிய உணவுகளுக்கு பதிலாக  கேரளாவின் பாரம்பரிய சத்யா விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இனிப்பு பாயசம் மற்றும் அப்பளத்துடன் இந்த உணவு வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் அளிக்கும் நன்கொடையிலிருந்தே அன்னதானத்துக்கான செலவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் , கேரளாவின் கலாசார அடையாளமாக சத்யா விருந்தைப் பொறுத்தவரை வாழை இலையில் பலவிதமான உணவுகள் பரிமாறப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

“சபரிமலையில் கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 3 நாட்கள் தினசரி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். 18-ம் படி வழியாக நிமிடத்திற்கு சராசரியாக 85 பக்தர்கள் வீதம் ஏற்றி விடப்படுகிறார்கள்.

சீசனையொட்டி 18 ஆயிரம் போலீசார் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு குழுக்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். எனவும் கூறினார்.

குறிப்பாக நேந்திரம் சிப்ஸ், சர்க்கரை வரட்டி, அப்பளம், இஞ்சிப்புளி, அவியல், நெய்யுடன்கூடிய பருப்பு, கிச்சடி, பச்சடி, மோர், ஊறுகாய் மற்றும் தேங்காய் சட்னி, பாயசம் உள்ளிட்டவை அடங்கும். இவற்றில் எந்தெந்த உணவு வகைகள் சபரிமலையில் வழங்கப்படும் அன்னதானத்தில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *