இந்த உரையாடலின்போது வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வரவேற்கப்பட்டன. இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவாக முடிப்பதற்கும், இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தைச் (IMEC) செயல்படுத்துவதற்கும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
மேலும், உக்ரைன் போரால் உலகளாவிய போர் மற்றும் பொருளாதார நிலைத்தன்மையில் பாதிப்படைந்ததாகக் கூறிய வான் டெர், உக்ரைனுடனான இந்தியாவின் தொடர் நிலைப்பாட்டையும் வரவேற்றார். அதுமட்டுமின்றி, ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், அமைதியை நோக்கிய பாதையை உருவாக்க உதவுவதில் இந்தியாவின் முக்கிய பங்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்தாண்டு நடைபெறவுள்ள இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டுக்கு இரு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த மாநாடு பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.