ஐ.டி. துறையில் உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம் | Minister Palanivel Thiagarajan is proud of the increasing contribution of Tamils ​​in the IT sector globally

1376338
Spread the love

சென்னை: ஐ.டி. துறை​யில் உலகம் முழு​வ​தி​லும் தமிழர்​களின் பங்​களிப்பு அதி​கரித்து வரு​கிறது என்று தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​தார். சர்​வ​தேச தமிழ் பொறி​யாளர்​கள் சங்​கத்​தின் முதல் மாநாடு மற்​றும் கண்​காட்சி சென்​னை வர்த்தக மையத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதன் தொடக்க விழா​வில் தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன், போக்​கு​வரத்து துறை அமைச்​சர் சிவசங்​கர் ஆகியோர் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​று, மாநாட்டை தொடங்கி வைத்​தனர்.

இந்த நிகழ்​வில் மூத்த விஞ்​ஞானி ஏ.சிவ​தாணுப் பிள்​ளை, இஸ்ரோ முன்​னாள் விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். விழா​வில் அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் பேசி​ய​தாவது: தமிழர்​களின் ரத்​தத்​தில் பொறி​யியல் ஊறியுள்​ளது. பல நூறு ஆண்​டு​களுக்கு முன்பு தமிழர்​களால் கட்​டப்​பட்ட துறை​முகங்​களே இதற்கு சான்​று. உலகம் முழு​வதும் உள்ள வர்த்தக மையங்​களு​டன் தமிழர்​கள் பன்​னெடுங்​கால​மாக பங்​கு​தா​ரர்​களாக இருந்​துள்​ளனர். இதற்​கான சான்​றாக, கீழடியில் ரோமானிய காசுகள் கண்​டெடுக்​கப்​பட்​டுள்​ளன.

மேலும், பிரம்​மாண்ட அணை​கள், சிறந்த கோயில்​களை தமிழக பொறி​யாளர்​கள் பல ஆண்​டு​களுக்கு முன்பே கட்​டி​யுள்​ளனர். குறிப்​பாக, மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயி​லில் மழைநீர் வடி​கால்​களுக்கு ஏற்​ற​வாறு சாய்ந்த கூரை​யில் இருந்து வடி​யும் மழைநீர் துவாரங்​கள் கொண்ட தூண்​கள் வழி​யாக நிலத்​துக்கு சென்​றடைகிறது. அதே​போல, தமிழகம் பொறி​யியல் துறை​யில் சிறந்து விளங்​கு​வதற்கு சத்​துணவு, இலவச மிதிவண்​டிகள், மடிக்​கணினிகள் உட்பட பல்​வேறு நலத்​திட்​டங்​கள் முக்​கிய காரண​மாக உள்ளன.

தமிழகம் முழு​வதும் கல்​வியை ஊக்​கு​விப்​ப​தன் பலனாக, முது​நிலை கல்​வி​யில் தமிழகம் முதன்மை இடம் பிடித்​துள்​ளது. தமிழகத்​தில் 54 சதவீத மாணவர்​கள் முது​நிலை கல்​வி​யில் சேரு​கின்​றனர். நமது மாநிலம் இந்​தி​யா​வின் 6 சதவீத மக்​கள்​தொகையை மட்​டுமே கொண்​டுள்​ளது. ஆனால், தேசிய அளவில் பொறி​யியல் பட்​ட​தா​ரி​களின் எண்​ணிக்​கை​யில் 20 சதவீதத்தை வகித்துவரு​கிறது. தமிழகத்​தின் ஐ.டி. சேவை​கள் உலகமெங்​கும் பெரும் பங்​களிப்பை வழங்கி வரு​கின்​றன. தமிழகம் மட்​டுமின்றி உலகம் முழு​வ​தி​லும் தமிழர்​களின் தாக்​கம் அதி​கரித்​து வரு​கிறது என்று​ கூறி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *