ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விமர்சித்த ஈரான் அதிபர்!

Dinamani2f2024 10 242fd64n62g92firan President Masoud Pezeshkian Tnie Edi.jpg
Spread the love

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதலை சமாளிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டதாக ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் விமர்சித்துள்ளார்.

ரஷியாவின் கசான் நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நடைபெற்றது. அக். 22, 23 என இரு நாள்களுக்கு இந்த மாநாடு நடைபெற்றது. உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனர்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில் பொருளாதார ரீதியாக வளர்ந்துவரும் பிரிக்ஸ் அமைப்பின் நாடுகளின் தலைவர்கள் குறித்து பேசிய ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான்,

மத்திய கிழக்கு மோதலை சமாளிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் தவறிவிட்டது. பாலஸ்தீனத்திற்குட்பட்ட காஸா பகுதி மற்றும் லெபனானில் உள்ள நகரங்களில் போர் நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையிலும் போர்த் தீ, நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்களிடம் குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *