ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகளில் லீக் ஆட்டங்கள் முடிந்து உள்ளன. கடைசி ஆட்டமான 70&வது போட்டியில் நேற்று(19ந்தேதி) இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா&ராஜஸ்தான் அணிகள் மோத இருந்தன. கவுகாத்தியில் நடைபெற இருந்த இந்த ஆட்டம் தொடங்க இருந்த நேரம் முதலே நல்ல மழை பெய்தது.
பலத்த மழை
இதனால் போட்டி தொடங்குவதில் தாதம் ஏற்பட்டது. இரவு 10 மணியளவில் ஓரளவு மழை விட்டதால் குறைந்த ஓவர்களிலாவது ஆட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டது. இதைத்தொடர்ந்து 7 ஓவர் போட்டியாக மாற்றி இரவு 10.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது.
7ஓவர் போட்டி
இதில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.வீரர்கள் மைதானத்தில் இறங்க தயாராகிக் கொண்டு இருந்தபோதே மீண்டும் மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்ததால் ஓவர் வீசாமலேயே டாஸ்போடப்பட்ட நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் மைதானத்தில் திரண்டு இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஐதராபாத்-பஞ்சாப்மோதல்
முன்னதாக நேற்று மாலை நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஐதராபாத்& பஞ்சாப் அணிகள் மோதின முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 214 ரன்கள் குவித்தது. பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் அணி 19.1 ஓவரில் 215 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியில் டிராவிஸ் ஹெட் ரன் எடுக்காமல் அவுட்டான நிலையில் அபிஷேக் சர்மா 28 பந்தில் 68 ரன்கள், கிளாசன் 26 பந்தில் 42 ரன்கள், ராகுல் திரிபாதி 18 பந்தில் 33 ரன்கள், நிதிஷ் ரெட்டி 25 பந்தில் 37 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
குவாலிபையரில் மோதும் அணிகள்
லீக்போட்டிகள் முடிவில் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா அணி முதல் இடத்தையும், 2-வது இடத்தை ஐதராபாத், 3-வது இடத்தை ராஜஸ்தான்,4-வது இடத்தை பெங்களூர் அணிகளும் பிடித்தன.
இதன் அடிப்படையில் குவாலிபையர் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா&ஐதாராபாத் அணிகள் வருகிற 21-ந்தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் மோதுகின்றன.
இதைத்தொடர்ந்து 22-ந்தேதி நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடித்த ராஜஸ்தான்-பெங்களூர் அணிகள் சந்திக்கின்றன. இந்த ஆட்டமும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.
சென்னையில் இறுதி போட்டி
பின்னர் வருகிற 24 ந்தேதி நடைபெறும் குவாலிபையர்-2 வது போட்டியில் குவாலிபையர்-1 ல் தோல்வி அடைந்த அணியும், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
இதையடுத்து ஐ.பி.எல்.இறுதிப்போட்டியும் வருகிற 26-ந்தேதி சென்னையில் நடக்கிறது. இதில் குவாலிபையர்-1 மற்றும் குவாலிபையர்-2 ல் வெற்றி பெற்ற அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னையில் 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.