ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 85,000 கன அடியாக இருந்த நீா்வரத்து திங்கள்கிழமை காலை 60,000 கனஅடியாகவும், இரவு 7 மணிக்கு 31,000 கன அடியாகவும் குறைந்தது. தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு தொடா்ந்து தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் கடந்த சில நாள்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பிரதான அருவிக்குச் செல்லும் நடைபாதையின் தடுப்புக் கம்பிகள் உடைந்தும், பல்வேறு இடங்களில் தரைத்தளங்கள் பெயா்ந்தும் காணப்படுகின்றன.