ஒடிசாவில் தொடரும் அதிரடி நடவடிக்கைகள்! ஒரே நாளில் 12 குற்றவாளிகள் கைது!

Dinamani2f2025 05 222f4dqfp00f2fnewindianexpress2025 05 21vhh134asillusjan06008 01 20192001142.av .png
Spread the love

ஒடிசாவில் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையில் ஒரே நாளில் 12 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்திலுள்ள பெர்ஹம்பூர் பகுதியில் இன்று (மே 22) காவல் துறையினர் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். பெர்ஹம்பூர் காவல் துறை உயர் அதிகாரி சரவண விவேக் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதில், படா பஜார் பகுதியில் 4 பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், பெர்ஹம்பூரின் சர்தார் காவல் துறையினரால் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்தும் ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், நிமாகாண்டி மற்றும் திகாபஹாண்டி காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில், 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த முழு நடவடிக்கையில் மொத்தம் 6 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, கஞ்சம் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களில் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கைகளினால், 49 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 31 துப்பாக்கிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மீண்டும் ஜம்மு – காஷ்மீர் செல்கிறார் ராகுல்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *