ஒடிசா: மணமகன் முன்னிலையில் மணமகளை துப்பாக்கிமுனையில் கடத்திய காதலன்; என்ன நடந்தது? | odisa lover kidnapped bride at gunpoint

Spread the love

ஒடிசா மாநிலம் பொலங்கிர் மாவட்டத்தில் உள்ள கந்தமால் என்ற இடத்தைச் சேர்ந்த ரேஸ்மி என்ற பெண்ணுக்கும் அதே மாவட்டத்தில் உள்ள காமக்யாநகர் பகுதியைச் சேர்ந்த ஹரிபந்து பட்டேல் என்பவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஹரிபந்து தனது கிராமத்தில் இருந்து மணமகள் வீட்டிற்கு உறவினர்களோடு திருமணத்திற்காக வந்திருந்தார். அவர்களுக்குத் திருமணம் வெகுவிமர்சையாக நடந்தது. திருமணம் முடிந்தவுடன் மணமகன் தனது மனைவியைத் தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

அவர்களோடு உறவினர்களும் சென்றனர். அவர்களது வாகனம் படாபந்தா என்ற இடத்தில் சென்றபோது அதனைச் சிலர் வழிமறித்தனர். காரில் இருந்து இறங்கிய மூன்று பேர் துப்பாக்கியுடன் வந்தனர்.

அவர்கள் ஹரிபந்துவை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி மணமகளைக் கடத்திச்சென்றனர். இதனால் மணமகனும், உறவினர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தனர். கடத்திச்சென்றது மணமகளின் முன்னாள் காதலன் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

மணமகளை நடுவழியில் கடத்திச்சென்றதால் வேறு வழியில்லாமல் ஹரிபந்து இது குறித்து அருகில் உள்ள போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மணமகளைக் கண்டுபிடித்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். திருமணமானவுடன் மணமகளைக் கடத்திச்சென்றதால் மணமகன் ஹரிபந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *