ஒடுக்கப்பட்டோர் தலைநிமிர தொடர்ந்து களத்தில் நிற்போம்: பிறந்தநாள் விழாவில் திருமாவளவன் உறுதி | thirumavalavan says let stand for oppressed peoples for field

1373398
Spread the love

சென்னை: ஒடுக்​கப்​பட்​ட​வர்​களின் தலைநிமிர்​வுக்​காக தொடர்ந்து களத்​தில் நிற்​போம் என்று விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார். விசிக தலை​வர் திரு​மாவளவனின் 63-வது பிறந்​த​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதை முன்​னிட்​டு, சென்னை காம​ராஜர் அரங்​கத்​தில் ‘மதச்​சார்​பின்மை காப்​போம்’ என்ற கருப்​பொருளு​டன் பல்​வேறு நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. மநீம தலை​வர் கமல்​ஹாசன் உள்​ளிட்​டோர் பங்​கேற்று வாழ்த்தி பேசினர்.

இதில் ஏற்​புரை நிகழ்த்தி திரு​மாவளவன் பேசி​ய​தாவது: விசிக என்​பது தமிழகத்​தின் தவிர்க்க முடி​யாத சக்​தி, தமிழகத்​தின் எதிர்​காலம் என்​ப​தை, இந்த விழா​வில் பங்​கேற்ற ஒவ்​வொரு​வரும் ஆற்​றிய உரை உறு​திப்​படுத்தி உள்​ளது. நாம் மேலும் தீவிர​மாக செயல்பட வேண்​டும் என்ற உணர்வை இது தரு​கிறது. ஒடுக்​கப்​பட்​ட​வர்​களின் தலை நிமிர்​வுக்​காக நாம் களத்​தில் நிற்​கிறோம், தொடர்ந்து நிற்​போம்.

இந்த நிலை​யில், தூய்​மைப் பணி​யாளர் பிரச்​சினை​யில் திரு​மாவளவன் ஏன் அரசை எதிர்த்து போ​ராட​வில்லை என்று விமர்​சிக்​கின்​றனர். குப்பை அள்​ளுவோரை பணி நிரந்​தரம் செய்​து, நீங்​கள் தொடர்ந்து அந்த தொழிலையே செய்து கொண்​டிருங்​கள் என்று சொல்​வது எந்த வகை​யிலும் ஏற்​புடையது அல்ல. இதை நாம் சொன்​னால் எதி​ராக பேசுவ​தாக கருது​வார்​கள். அதனாலேயே, நாமும் பணி நிரந்​தரம் செய்ய வேண்​டும் என்று சொல்ல நேர்ந்​தது.

வாக்​குரிமையை பறிக்​கும் முயற்​சி​யில் பாஜக ஈடு​பட்டு வரு​கிறது. ஆனால், அவர்​களை யாரும் விமர்​சிப்​பது இல்​லை. ஆனால், ‘திரு​மாவளவன் இரண்டு சீட்​டுக்​காக போய் நிற்​கிறார்’ என்​கின்​றனர். அது எங்​கள் விருப்​பம். எந்த கூட்​டணி என்​பதை நாங்​கள்​தான் முடிவு செய்​வோம். அரசி​யல் நகர்​வு​களை நாங்​களே தீர்​மானிப்​போம். யாரும் என்னை தடுக்க முடி​யாது. யாராலும் விலை பேச முடி​யாது.

நாங்​கள் திமுகவோடு இணைந்து பயணிப்​ப​தற்​கு, அம்​பேத்​கர், பெரி​யார் கருத்​தி​யலை பின்​பற்​று​வதே காரணம். திமுக கூட்​ட​ணி, அதி​முக கூட்​டணி என்​ப​தல்ல விஷ​யம். மதச்​சார்​புள்ள கூட்​ட​ணி, மதச்​சார்​பற்ற கூட்​டணி என்​பதே நாடு முழு​வதும் உள்ள முக்கியமான அரசி​யல். மதச்​சார்​பின்மை காப்​போம் என்ற கருத்​தி​யலை மக்​களிடம் கொண்​டு​போய் சேர்ப்​ப​தன் மூல​மாகவே மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யின் வெற்​றியை நாம் மேலும் உறு​திப்​படுத்த முடி​யும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

தலை​வர்​கள் வாழ்த்து: இதற்​கிடையே, பல்​வேறு தலை​வர்​களும் திரு​மாவளவனுக்கு பிறந்​த​நாள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். அவர்​கள் கூறி​யுள்​ள​தாவது:

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல்​காந்​தி: அனை​வரும் அதி​காரம், சம உரிமை, கண்​ணி​யம் பெறு​வதற்கு நாம் ஒன்​று​பட்டு நிற்​போம்.

முதல்​வர் ஸ்டா​லின்: ஆழ்ந்த அறி​வும், தெளி​வான சிந்​தனை​யும், உழைக்​கும் மக்​களின் நலன் காக்க உரமாகும் தியாக எண்​ண​மும் கொண்ட அருமை சகோ​தரர் திரு​மாவளவனுக்கு பிறந்​த​நாள் வாழ்த்​துகள். நமது லட்​சி​யப் பயணத்​துக்கு துணை​யாக வரும் அவர், மகிழ்ச்​சி​யுட​னும், உடல்​நலத்​துட​னும் வாழ வாழ்த்​துகிறேன்.

துணை முதல்​வர் உதயநி​தி: மதச்​சார்​பின்​மை, சமூகநீதி காக்​கும் களத்​தில் உறு​தி​யாய் நிற்​கும் விசிக தலை​வர் திரு​மாவளவனின் சமூக, அரசி​யல் பணி​கள் என்​றும் நிலைத்​திருக்​கும். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம், தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, தி​முக துணை பொதுச் செய​லா​ளர் கனி​மொழி எம்.பி. அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், நாம் தமிழர்​ கட்​சி தலை​மை ஒருங்​கிணைப்​பாளர்​ சீமான்​ உள்​ளிட்​டோரும்​ வாழ்த்​து தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *