‘ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைப்பற்றி கூறவில்லை’ தி கேரளா ஸ்டோரி 2 சினிமா மீதான தடையை நீக்கிய ஐகோர்ட்!

Spread the love

லவ் ஜிகாத்தை மையமாகக்கொண்டு வெளியான கேரளா ஸ்டோரி சினிமாவின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. “தி கேரளா ஸ்டோரி 2 கோஸ் பியாண்ட்’ என்ற திரைப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ளார். உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஓஜா மற்றும் அதிதி பாட்டியா ஆகியோர் இந்த சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அந்த சினிமாவின் டீசர் வெளியான நிலையில் மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக்கூறி கண்ணூரைச் சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூதிரி என்பவர் கேரளா ஸ்டோரி 2 சினிமாவுக்கு எதிராக கேரளா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பிப்ரவரி 27-ம் தேதி (நேற்று) கேரளா ஸ்டோரி 2 திரைப்படம் வெளியிடப்பட இருந்த நிலை கேரளா ஐகோர்ட் சிங்கிள் பெஞ்ச் நேற்று முன் தினம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் உடனடியாக உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர்.

கேரள உயர்நீதிமன்றம்

கேரள உயர்நீதிமன்றம்

மேல்முறையீட்டு வாதத்தில், படத்தின் டீசர் வெளியான 16 நாட்களுக்குப் பிறகு சினிமாவை தடைச்செய்ய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும். கேரளா ஸ்டோரி பார்ட் 1 திரைப்படம் தேசிய விருதுகளை வென்ற படம் என்றும், அதற்கு சி.பி.எஃப்.சி தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்றும். படம் சில சமூக பேரழிவுகளைப் பற்றி பேசுகிறது. இந்த சினிமா கேரளாவை அவமதிக்கவில்லை. இது சமூக தீமைகளை ஊக்குவிப்பவர்களுக்கு எதிரான படம். ஒட்டுமொத்தமாக ஒரு மதத்தைப்பற்றி இந்த சினிமாவில் கூறவில்லை. மாறாக அதில் உள்ள ஒரு பகுதியினர் சமூக தீமைக்குப் பின்னால் உள்ளதைப் பற்றிதான் கூறுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *