திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தங்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று நேற்றுமுன்தினம் (டிச. 18) சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கொரோனா காலத்தில் பணிபுரிந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் செவிலியர்கள் போராட்டம் குறித்து தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
“செவிலியர்கள் இரண்டு, மூன்று கோரிக்கைளை வைக்கிறார்கள். அதில் ஓரிரு கோரிக்கைகளுக்கு தீர்வு காண இருக்கிறோம்.
காலிப்பணியிடங்களே இல்லாத நிலை இப்போது இருக்கிறது.
ஒப்பந்த செவிலியர் பணியாளர் முறையை கொண்டுவந்ததே ஜெயலலிதா தான்.