ஒரத்தநாடு: டிட்வா புயல் எதிரொலி; கடும் குளிர் காற்றைத் தாங்க முடியாமல் 50 ஆடுகள் பலி? | Orathanadu: Cyclone Titva’s aftermath; 50 goats die after being unable to withstand the bitter cold?

Spread the love

ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரைக்கோட்டை கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் யேசு. இவர் பின்னையூரில் உள்ள ஒரு தோப்பில் சுமார் 300 ஆடுகள், 25 மாடுகளுடன் கிடை அமைத்திருந்தார்.

தினமும் வயல்களில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக சில தினங்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது.

நேற்று பகல் முழுவதும் நிற்காமல் மழை பெய்து வந்தது. இதனால் ஆடுகள் மற்றும் மாடுகள் மேய்ச்சலுக்குச் செல்லவில்லை.

தொடர் மழை ஆடுகள் உயிரிழப்பு

தொடர் மழை ஆடுகள் உயிரிழப்பு

நேற்று இரவு ஆடு, மாடுகளுக்குத் தீவனம் வைத்து சாப்பிட வைத்துள்ளார் யேசு. பிறகு அவர் தூங்க சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை யேசு எழுந்து பார்த்துள்ளார். அப்போது 50 ஆடுகள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர் மழையில் குளிர் காற்று அதிகமாக இருந்தது. குளிரைத் தாங்க முடியாமல் ஆடுகள் இறந்ததாகச் சொல்லப்படுகிறது.

இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் 4 லட்சம் இருக்கும் என்கிறார்கள். இதனால் யேசு குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ், திருவோணம் தாசில்தார் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *