சொந்த மண்ணில் ஒரு ஒயிட்வாஷ் உள்பட கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 6-இல் இந்திய அணி தோல்வியடைந்தது. அணித் தேர்வுக்குழு புதிய கேப்டனைத் தேர்ந்தெடுக்கும் வரை இந்திய டெஸ்ட், ஒருநாள் கேப்டனாக தொடர ரோஹித் சர்மா முடிவு செய்துள்ளார்.
சரியான நேரத்தில் இந்தியாவை வழிநடத்த தேர்வாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரருக்கு தனது முழு ஆதரவையும் வழங்க சர்மா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி போன்ற முக்கியமான ஒருநாள் போட்டிகள் இன்னும் ஆறு வாரங்களில் இந்திய அணி விளையாட இருப்பதால், கேப்டனை மாற்றுவது சரியாக இருக்காது. இது அணிக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடவிருக்கிறது. 37 வயதான ரோஹித் சர்மா அந்த தொடருக்கு தேர்வு செய்யப்பட மாட்டார் என்ற தகவல்கள் ஊகங்களில் பரவி வருகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின்னரே ரோஹித் சர்மா அணியில் இருப்பாரா? அல்லது நீக்கப்படுவாரா? என்பது தெரியவரும்.