அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 370 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; முகமது ஷமி அணியில் சேர்ப்பு!
சதம் விளாசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்
இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதீகா ராவல் களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பிரதீகா ராவல் 61 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
Maiden ODI Century in
A splenid knock that from Jemimah Rodrigues
Updates ▶️ https://t.co/zjr6BQy41a#TeamIndia | #INDvIRE | @IDFCFirstBank | @JemiRodrigues pic.twitter.com/03hWTMWb8t
— BCCI Women (@BCCIWomen) January 12, 2025
இதனையடுத்து, ஹர்லீன் தியோல் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தனர். தொடக்க வீராங்கனைகள் அதிரடியாக விளையாடியது போன்று இந்த இணையும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஹர்லீன் தியோல் அரைசதம் கடந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஒருநாள் போட்டிகளில் அவரது முதல் சதத்தை பதிவு செய்தார். ஹர்லீன் தியோல் 84 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 91 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய ஜாண்டி ரோட்ஸ்!
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 370 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் ஓர்லா பிரண்டர்கேஸ்ட் மற்றும் அர்லீன் கெல்லி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜியார்ஜினா டெம்ப்ஸி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாடி வருகிறது.