சென்னை: சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருதாசர் சுவாமி கோயிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருவான்மியூர் பாம்பன் குமரகுருதாசர், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி, திருக்கருக்காவூர் முல்லைவனநாத சுவாமி, வியாசர்பாடி இரவீசுவரர், கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி, கொளத்தூர் சோமநாத சுவாமி, சோமாசிபாடி பாலசுப்பிரமணிய சுவாமி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள குபேரலிங்கம் ஆகிய 8 கோயில்களில் அன்னதான திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.