நான்கைந்து பெண்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு போயிருக்கிறார். ‘என்ன, தனியா வருவான்னு பார்த்தா படையோட வந்திருக்காளே’ என யோசித்த நம்பர் 2, ஒப்புச் சப்புக்கு கொஞ்சம் நேரம் பேசி விட்டு ‘அப்ப நீங்க எல்லாரும் கிளம்புங்க’ எனச் சொல்லியிருக்கிறது.
உடன் வந்தவர்களுடன் சேர்ந்து தலைவியும் கிளம்ப முற்பட, ‘நீ எங்க போற’ என அவரை மட்டும் இருக்கச் சொல்லியிருக்கிறார் அவர்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இருக்கையில் அமர, அருகே வந்து தன் சேட்டையை தொடங்கியிருக்கிறார் நம்பர் 2 நபர்.
அவ்வளவுதான், மறு நொடி கன்னம் பழுக்க ஒரு அறை. கொடுத்து விட்டு வெடுக்கென வெளியேறி விட்டார் மகளிரணி.
அடி வாங்கின பிறகு சும்மா இருப்பாரா. அந்தப் பெண்ணுக்கு ஏகப்பட்ட தொல்லைகள் தந்து கொண்டே இருந்திருக்கிறார்.
‘கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துட்டு போயிட்டா மகாராணி மாதிரி இருக்கலாம். புரிஞ்சு நடந்துக்கோ’ என கிடைக்கிற கேப்பிலெல்லாம் நூல் விட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்.
ஆனால் இடம் கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்து விட்டார் அந்த பெண் நிர்வாகி.
பொறுத்துப் பார்த்த நிர்வாகி, இதற்கு முன் அக்கட்சி மாநில தலைவராக இருந்தவரிடம் புகாரும் தந்திருக்கிறார்.
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, முன்பு காவல் பணியிலிருந்த அந்த தலைவரும் இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளவே இல்லை.
விளைவு, தேர்தல் நேரம் பார்த்து விஷயத்தை டெல்லிக்கு புகாராக அனுப்பி கலகத்தை தொடங்கி வைத்துவிட்டார். மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் எல்லாமே அந்த புகாரில் இருந்தது தான்.
பாதிக்கப்பட்டதாகச் சொல்லும் அந்தப் பெண்ணிடம் நாம் பேசினோம்.
”ஆமாங்க. புகார் சொன்னது நாந்தான். புகாரில் சொல்லியிருக்கும் அத்தனையும் நான் அனுபவச்சது. எனக்கு நடந்தது. ஒரு தடவை கன்னத்துல அறைஞ்சதும் திருந்திடுவார்னு பார்த்தேன். அப்படியும் திருந்தலை. கட்சிங்கிற ஒரு அமைப்புல இருக்கிறதால புகாரை முதல்ல அங்க அனுப்பி வச்சேன். இங்க இருக்கிறவங்க நடவடிக்கை எடுக்காட்டி அடுத்து அங்கதான அனுப்ப முடியும். அதான் அனுப்பியிருக்கேன். அவங்க இந்தாள் மேல என்ன நடவடிக்கை எடுக்கறாங்கங்கிறதைப் பொறுத்தே என் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்க்கும்’ என முடித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.