அவர் காலணி இல்லாமல் வெறுங்காலில் நடத்திருக்கிறார். இதேபோல் கிராமத்தில் பலர் வெறுங்காலுடன் சென்றதையும் அவர் கவனித்திருக்கிறார். கிராமத்தில் வசிப்பவர்கள் குறித்த தகவலைக் கேட்டறிந்த பவன் கல்யாண், அனைவருக்கும் காலணிகளை ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
துணை முதல்வர் கேட்டுக்கொண்டதன் பேரில் கிராமத்தில் வசிக்கும் சுமார் 350 பேருக்கும் உடனே காலணிகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், இதற்கு முன்பு வேறு எந்த தலைவரும் எங்களைப் பார்க்கவோ அல்லது எங்களின் பிரச்னைகளைக் கவனிக்கவோ இல்லை.
பவன் கல்யாணின் இந்த நடவடிக்கையால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம் என்றார்.