ஷுப்மன் கில் கூறுவதென்ன?
பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது ஒட்டுமொத்த அணியின் ஃபார்மினை தீர்மானிக்காது என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு தொடர் ஒட்டுமொத்த அணியின் ஃபார்மினை தீர்மானிக்காது. பல்வேறு தொடர்களில் இந்திய அணியின் வீரர்கள் பலரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின்போது, நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இருப்பினும், நாங்கள் நன்றாகவே விளையாடினோம்.