அது தொடுவது போலக்கூட இல்லை. என்னை அறைந்தது போல இருந்தது. அப்போது நான் குழந்தையாக இருந்தேன்.
அந்த வலியை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன். என் அம்மா தெருக்களில் நடக்கும்போது எப்படி நடக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக்கொடுத்தார்.
கடை ஜன்னல்களில் பொருட்களைப் பார்க்காதே. ஆண்களின் கைகளைப் பார்த்துக்கொண்டே நடக்க வேண்டும்.
ஒரு தாய் தன் குழந்தைக்கு இப்படிக் கற்றுக்கொடுக்க வேண்டிய சூழலை கற்பனை செய்து பாருங்கள்.

மேலும், ஆண்களிடமிருந்து பல சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஒருவர் தனது வேட்டியை தூக்கி அவரின் உறுப்பைக் காட்டிக்கொண்டிருப்பார்.
அப்போது எனக்கு என்ன நடக்கிறது என்று சுத்தமாகப் புரியவில்லை.
பல ஆண்டுகள் கழித்து மட்டுமே திரும்பிப் பார்க்கும்போது, இத்தகைய அனுபவங்கள் நமது உடலிலும் மனதிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்று உணர்கிறோம்.” எனக் கூறியிருக்கிறார்.