`ஒரு நாளைக்கு 120 கோடி என்பதே குறைவு!’ – `BulkPe’ சாகச கதை | The startup success story of BulkPe

Spread the love

தொழில்நுட்ப ரீதியாக, நாங்கள் பல சவால்களை எதிர்கொண்டோம். அவற்றில் இரண்டு முக்கியமானவை:

1.  நிகழ்நேர கணக்கு சரிபார்ப்பு (Real-time reconciliation): தினமும் லட்சக்கணக்கான தரவுகள் வருகின்றன. ஒரு சிறிய முரண்பாடு கூட வாடிக்கையாளரின் நடைமுறை மூலதனத்தை (Working capital) முடக்கிவிடும். எனவே, நாங்கள் எங்களுக்கென சொந்தமாக ஒரு ‘Reconciliation engine’-ஐ உருவாக்கினோம். இதன் ஒரே குறிக்கோள்: “ஒவ்வொரு பரிவர்த்தனையும் அதன் சரியான இடத்தை சரியான நேரத்தில் அடைய வேண்டும்” மற்றும் அதன் இறுதி நிலை துல்லியமாக வாடிக்கையாளருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

2.  வங்கி சர்வர் நம்பகத்தன்மை & மோசடி தடுப்பு: ஒரு வங்கியின் சர்வர் செயலிழந்தால், வாடிக்கையாளர் வங்கியைப் பழிசொல்வதில்லை, எங்களைத்தான் குறை கூறுவார்கள். இதைத் தீர்க்க, மல்டி-பேங்க் ரூட்டிங் (Multi-bank routing), தானியங்கி மாற்று வழிகள், 24/7 கண்காணிப்பு போன்றவற்றை உருவாக்கினோம். எங்களைச் சுற்றியுள்ள அமைப்புகள் உடைந்தாலும், எங்கள் தளம் தொடர்ந்து இயங்க வேண்டும். இன்றும் கூட, மனிதத் தலையீடு தேவைப்படும் ஏதேனும் சிக்கல்கள் வந்தால், நள்ளிரவில் என் போனில் ஒலிக்கும் எச்சரிக்கை அலாரத்தைக் கேட்டு நான் விழித்தெழுவதுண்டு.

செயல்பாட்டு ரீதியாக, ஒவ்வொரு முடிவும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கலாச்சாரத்தை உருவாக்குவதே மிகப்பெரிய சவாலாக இருந்தது.

இதற்கிடையில் உணர்ச்சிகரமான ஒரு உண்மை என்னவென்றால்:

ஒரு நாள் இரவு, ஒரு சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோது, நானும் எனது இணை நிறுவனர் சவுரப் மற்றும் CTO ஹரீஷ் கார்த்திக்கும் பணியில் இருந்தோம். அவர் படுக்கையிலிருந்து எழுந்து நேராக சமையலறைக்குச் சென்று காபி போட்டுக்கொண்டு வந்து, “என்ன நடந்தாலும் சரி, இந்தப் பிரச்சனை தீரும் வரை நாம் தூங்கக் கூடாது,” என்றார். அந்தத் தருணம் Bulkpe என்றால் என்ன என்பதை உணர்த்தியது. ஒரு சிறிய குழு, கூர்மையான திட்டம் மற்றும் “தொழிலதிபர்கள் தங்கள் பணத்தை நம்பி நம்மிடம் கொடுத்திருக்கிறார்கள், அந்த நம்பிக்கை  ஆத்மார்த்தமானது” என்ற ஒருமித்த எண்ணம்.

எனவே எங்களது கவனம் சர்வர்கள், மார்க்கெட்டிங் அல்லது டேஷ்போர்டுகள் அல்ல… தினமும் காலையில் எழும்போது, ஆயிரக்கணக்கான வணிகங்களின் இதயத் துடிப்பை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வுதான் ₹120 கோடியைக் கையாள்வதில் உள்ள உண்மையான சவால்.

இதுவரை  நாங்கள் ரூ.43,000 கோடிக்கு மேல் பரிவர்த்தனை செய்திருக்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *