பட மூலாதாரம், Getty
இங்கிலாந்து எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, இந்தியா வெற்றிபெற 207 ரன்களை இலக்கு நிர்ணயித்திருந்தது.
இந்திய அணியின் துவக்க ஆட்டக்கார்ரகள் இருவருமே சிறப்பாக விளையாடியதால் 31ஆவது ஒவரிலேயே இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. அஜித் ரஹானே 106 ரன்களையும், ஷிக்கர் திவான் 97 ரன்களையும் எடுத்தனர்.
முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியுற்றது.