அவர், “ஒருநாள் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தேன். அப்போது சாய் ராஜேஷ் வந்து, ‘நான் ‘பேபி’ படத்தை இயக்கிய இயக்குநர்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் என்னிடம் என்ன வேலைக்காக வந்திருக்கிறார் என்றே தெரியவில்லை.
பிறகு நான் அவரிடம் ‘என் ஹார்மோனியம் எங்கே இருக்கிறது என்றே எனக்குத் தெரியாது’ என்று சிரித்தபடி சொன்னேன்.
ஆனால் அவர் விடாமல் தேடி, அதன் மீதிருந்த தூசியைத் துடைத்து, என் முன் கொண்டு வந்தார்.
ஒரு பாடலை இசையமைத்த பிறகு, இசை இன்னும் எனக்குள் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அதன் பிறகு குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியாக பல அழகான பாடல்களை உருவாக்கினேன்.” என்றார்.