செளதி அரேபியாவில் சாதாரண ரப்பர் செருப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒரு லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை நம்ப முடிகிறதா?
செருப்பு கடையில் ஒரு லட்ச ரூபாய் விலைப்பட்டியலுடன் ரப்பர் செருப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ள விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்த விடியோவை பார்க்கவில்லை என்றால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.
இந்தியாவில் இந்த வகை ரப்பர் செருப்புகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் விலை தோராயமாக ரூ.100 என்ற அளவிலேயே இருக்கும். ஆனால், செளதி அரேபியாவில் உள்ள செருப்புக் கடையில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு ரப்பர் செருப்புகள் விற்கப்பட்டு வருகின்றன.
ஆச்சரியம் என்னவென்றால், அதன் விலைக்குறிப்பில் 4,590 ரியால்ஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனில், இந்த ரப்பர் செருப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புடையது.
இதனை கையுறை அணிந்த கையுடன் எடுத்து காண்பிக்கும் கடையின் ஊழியர், ரப்பர் செருப்பின் வளைவுத் தன்மை, வடிவமைப்பு உள்ளிட்ட சிறப்புகள் குறித்து வாடிக்கையாளருக்கு விவரிக்கிறார்.
ரிஷி பாக்ரீ என்பவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இந்த விடியோவை பகிர்ந்துள்ளார். இந்த விடியோவில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
We Indians use these sandals as a toilet footwear pic.twitter.com/7EtWY27tDT
— Rishi Bagree (@rishibagree) July 16, 2024