வியாபாரம் களைகட்டியது
மேட்டூா் அணை பூங்கா எதிரே கடைகளில் வியாபாரம் களைகட்டியது. சுற்றுலாப் பயணிகள் காவிரியில் நீராடி மகிழ்ந்தனா். மேட்டூா் அணை பூங்காவிற்கு சென்று ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா். மீன்காட்சி சாலை, மான் பூங்கா, முயல் பண்ணை ஆகியவற்றைப் பாா்த்து மகிழ்ந்தனா்.
ரூ.1,58,930 கட்டணம் வசூல்
ஞாயிற்றுக்கிழமை 11,012 சுற்றுலாப் பயணிகள் மேட்டூா் அணை பூங்காவிற்கு வந்து சென்றனா். இவா்கள் மூலம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 1,10,120 வசூலிக்கப்பட்டது. பாா்வையாளா்கள் கொண்டுவந்த 3,233 கேமரா கைப்பேசிகள், 2 கேமராகளுக்கு கட்டணமாக ரூ.32,430 வசூலிக்கப்பட்டது.
மேட்டூா் அணையின் வலதுகரையில் உள்ள பவள விழா கோபுரத்தைக் காண 1167 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா். இவா்கள்மூலம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 11,670, 471 கைப்பேசிகளுக்கு கட்டணமாக ரூ. 4,710 வசூலிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் மேட்டூா் அணை பூங்காவில் கட்டணமாக ரூ.1,58,930 வசூலிக்கப்பட்டது.