இன்று வங்கி கணக்கு தொடங்குவதிலிருந்து பலதரப்பட்ட பொது மக்கள் சேவைகள் வரை, ஆதார் அடையாள எண் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது.
இந்நிலையில், ஆதார் விண்ணப்பிக்கவும், அதிலுள்ள தகவல்களை மாற்றம் செய்யவும் பலருக்கு நேரம் இருப்பதில்லை; எங்கே சென்று எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதும் பலருக்கு தெரியவில்லை. இதற்காகவே, மக்கள் அதிகமாகக் குவியும் சென்னை 49ஆவது புத்தகக் கண்காட்சியில் இந்திய தபால் துறை சார்பில் ஒரு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
ஆதார் சேவைகள் மட்டுமல்லாமல், போஸ்ட் சேவைகள், மை ஸ்டாம்ப் சேவைகள் என பல்வேறு சேவைகள் அங்கு வழங்கப்படுகின்றன. அங்கிருந்த அரசு ஊழியர் ராம்குமாரிடம் இதுகுறித்து கேட்டோம்.

ஆதார் டு போஸ்ட்டல்!
“இங்கு ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் வழங்குகிறோம். குழந்தைகளுக்கு புதிய ஆதார் விண்ணப்பிப்பது முதல், ஆதாரில் மொபைல் எண், புகைப்படம், முகவரி, இனிஷியல் மாற்றம் போன்ற சேவைகளையும் இங்கேயே செய்து தருகிறோம்.