மேற்கு மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
சாங்லியில் வசிக்கும் கேடேகர்கள் மற்றும் நர்வேகர்கள் என்ற இரு குடும்பங்கள் கோலப்பூரில் நிகழ்ந்த திருமணத்தில் கலந்துகொண்டு திரும்பக்கொண்டிருந்தபோது நள்ளிரவு 12.30 மணியளவில் பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கிருஷ்ணா ஆற்றில் இரண்டு பாலங்கள் உள்ளன. பழைய பாலத்தின் வழியாக கார் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் இரண்டு பாலங்களுக்கு இடையே விழுந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிரசாத் பால்சந்திர கெடேகர் (35), அவரது மனைவி பிரேரனா (36) மற்றும் வைஷ்ணவி சந்தோஷ் நர்வேகர் (21) ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் சமர்ஜீத் பிரசாத் கேடேகர் (7), வரத் சந்தோஷ் நர்வேகர் (19), சாக்ஷி சந்தோஷ் நர்வேகர் (42) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.