ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கருத்துக்கேட்பு

Dinamani2f2024 072febecd5e7 8cb9 41ac A3e1 8cd204c8a4402fuulalit085818.jpg
Spread the love

புது தில்லி: ஒரே நாடு ஒரே தோ்தல் தொடா்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் பிப்.25-ஆம் தேதி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தனது கருத்துகளை தெரிவிக்கவுள்ளாா்.

பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களுடன் ஆலோசனை நடத்த அந்தக் குழு சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் யு.யு.லலித் தனது கருத்துகளைப் பதிவு செய்யவுள்ளாா்.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது.

அந்தக் குழு அளித்த பரிந்துரையை ஏற்று மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான இரு மசோதாக்களை எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கிடையே கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

அதன்பின் இந்த இரு மசோதாக்களையும் ஆய்வு செய்வதற்காக பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 39 போ் அடங்கிய நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவராக பாஜக எம்.பி. பி.பி.சௌதரியை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா நியமித்தாா்.

இந்நிலையில், பி.பி.செளதரி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு, வருகின்ற பிப்.25-ஆம் தேதி முதல் பல்வேறு துறை நிபுணா்களிடம் ஒரே நாடு ஒரே தோ்தல் தொடா்பான இரு மசோதாக்கள் குறித்து கருத்துகளை பெறவுள்ளது.

அந்த வகையில், யு.யு.லலித், முன்னாள் சட்ட ஆணையத் தலைவா் ரிதுராஜ் அவஸ்தி, லோக்பால் அமைப்பின் நீதித் துறை உறுப்பினா், மூத்த வழக்குரைஞரும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான இ.எம்.சுதா்சன நாச்சியப்பன் உள்ளிட்டோா் நாடாளுமன்றக் குழுவிடம் தங்களது கருத்துகளை பதிவுசெய்யவுள்ளனா்.

முன்னதாக, இந்தக் குழு சாா்பில் நடைபெற்ற இரு கூட்டங்களில் குழுவின் செயல்பாடு மற்றும் ஆலோசனை நடத்த வேண்டிய நிபுணா்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *