காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக, ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2.25 கனஅடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கபினி அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி 3 நாள்களாக உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையின் உபரி நீர் வரத்து காரணமாக மேட்டூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5,054 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து மாலையில் வினாடிக்கு 16,577 கன அடியாக கன அடியாக அதிகரித்தது.