ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் ஏமாற்றம் தந்த புதிய ஓப்பனிங் காம்போ!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜோ ரூட் டக் அவுட் ஆனார். ரூட் உட்பட 3 பேர் டக் அவுட், 3 பேர் ஒற்றை இலக்கத்தில் அவுட். அதையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.
வார்னரின் ஓய்வுக்குப் பிறகு உஸ்மான் கவாஜாவுடன் நிறைய ஓப்பனர்களை ஆஸ்திரேலிய அணி இறக்கிப் பார்த்துவிட்டது. ஆனால், எதுவும் ஒத்துவரவில்லை.
அதனால் இன்று உஸ்மான் கவாஜாவையே ஓப்பனிங் இறக்காமல் புது முயற்சியாக அறிமுக வீரர் ஜேக் வெதரால்டையும், மார்னஸ் லபுஷேனையும் ஆஸ்திரேலியா ஓப்பனிங் இறக்கியது.
ஆனால், அந்தப் புது முயற்சியை ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்னிங்ஸின் இரண்டாவது பந்திலேயே உடைத்தார். ஜேக் வெதரால்ட் தனது முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆகி பெவிலியன் பக்கம் நடையைக் கட்டினார்.
அடுத்து 10 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடித்து நின்ற லபுஷேன் – ஸ்மித் கூட்டணியை மீண்டும் ஜோஃப்ரா ஆர்ச்சர் உடைத்தார். 9 ரன்களில் லபுஷேன் ஏமாற்றமளித்தார்.