ஒரே நேரத்தில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்!

Spread the love

அவரது தீர்ப்பில், “மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆனந்தசேகருக்கு எந்த விதமான அனுதாபமோ, கருணையோ காட்ட முடியாது. குற்றவாளியின் இந்தச் செயல் உச்சகட்ட கொடூர புத்தியை வெளிக்காட்டுகிறது. குடிபோதையில் செய்த தவறு என்பதை ஏற்க முடியாது. இது போன்ற தவறில் கருணை காட்டுவது போக்சோ சட்டத்தின் நோக்கத்தினை சிதைத்து விடும்.

நெல்லை நீதிமன்ற வளாகம்

நெல்லை நீதிமன்ற வளாகம்

அத்துடன், குற்றவியல் நீதி நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து விடும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும்” எனக் குறிப்பிட்டதுடன், தூக்கு தண்டனை விதித்தார். இதில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றங்களுக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.56 ஆயிரம் அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *