உலகளவில் பெரும் நிறுவனங்களில் பிப்ரவரியில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகளவில் பெரும் நிறுவனங்களில் பணிநீக்கச் செயல்முறை சமீபகாலமாக அதிகரித்தவாறு உள்ளது. நிறுவனங்களை மறுசீரமைத்தல், செலவுகளைக் குறைத்தல், ஊழியர்களுக்கு பதிலாக செயல் நுண்ணறிவைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், டெக் நிறுவனங்கள் பலரும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 16,000 பேரை பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.