ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு நேரடி அரசு வேலை: உ.பி. முதல்வர்!

Dinamani2f2024 09 022fm2zlucf82ftnie Import 2022 4 3 Original Yogi Adityanath Pti.jpg
Spread the love

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு நேரடி அரசு வேலை வழங்கப்படும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் மண்டல அளவிலான முதல் ஜூனியர் ஹாக்கிப் போட்டிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று (செப் 1) தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர், “துரதிஷ்ர்டவசமாக முன்பு இருந்த மக்கள் விளையாட்டைக் குறித்த எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருந்தனர். ஆனால், தற்போது அவை மாறியுள்ளன. விளையாட்டுகள் தொடர்பான நல்ல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தனியார் பயிற்சி மையங்கள் இதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

இளைஞர்களிடையே விளையாட்டுகளை ஊக்குவிக்க விளையாட்டுக் கொள்கைகளை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம் ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த், ஏசியன் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு நேரடி அரசு வேலை வழங்க முடிவு செய்துள்ளோம். இது விளையட்டில் மேலும் பலரை ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

”ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க நமது அரசு முடிவெடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, விளையாட்டுத் துறை ஒன்றை உருவாக்கப்பட்டு அதற்கு பிரபல முன்னாள் ஹாக்கி வீரரான மேஜர் தியான் சந்த் பெயர் வைக்கப்படும்” என்றும் யோகி அறிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *