இதுகுறித்து நீடா அம்பானி கூறுகையில், “சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் உள்ள நண்பர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்றார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் இணைந்த முதல் இந்தியப் பெண் என்ற முறையில், நீடா அம்பானி, ஒலிம்பிக் பார்வையை மேம்படுத்தி, உலகளாவிய அமைப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் முதல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமர்வை மும்பையில் நடத்துவதில் நீடா அம்பானி முக்கிய பங்கு வகித்தார்.
வருகிற 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஏலம் எடுக்க இந்தியா திட்டமிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.