இத்தாலியின் மிலான்-கோர்டினா (Milan-Cortina) பகுதியில் 2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்காகப் பிரமாண்ட உடற்பயிற்சிக் கூடம், டேபிள் ஃபுட்பால், ஏர் ஹாக்கி, பியானோ மற்றும் இலவச குளிர்பான இயந்திரங்கள் எனப் பல வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில், விளையாட்டு வீரர்களுக்கு ஆணுறைகளும் வழங்கப்படும்.
எனவே, விளையாட்டு வீரர்களுக்காக 10,000 இலவச ஆணுறைகள் வழங்கப்பட்டிருந்தன. ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சில நாள்களே ஆன நிலையில், வீரர்களுக்காக வழங்கப்பட்டிருந்த 10,000 இலவச ஆணுறைகள் மூன்றே நாள்களில் தீர்ந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் செய்தியாளர்களிடம் நகைச்சுவையாகப் பேசினார்.
அப்போது, “ஒலிம்பிக் கிராமத்தில் காதலர் வாரக் கொண்டாட்டம் உச்சத்தில் உள்ளது என்பதை இது காட்டுகிறது. 2,800 வீரர்கள் உள்ளனர். 10,000 ஆணுறைகள் தீர்ந்துவிட்டன. கணக்கைப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒலிம்பிக் சாசனத்தின் விதி 62-ன் படி, கண்டிப்பாக ஆணுறை வழங்கப்பட வேண்டும்.