34-வது ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளன.
இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் விளையாடுவதே தனது முக்கிய இலக்கு என ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்றிருக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித், “2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டும் என்பதுதான் என் முதன்மை இலக்கு.