“ஒழுக்கம் அவசியம் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர்!” – ஊர்வசியின் மகள் தேஜலக்‌ஷ்மி |”They have repeatedly emphasized the need for discipline!” – Urvashi’s daughter Tejalakshmi

Spread the love

தேஜலக்ஷ்மி கூறுகையில், “நான் எப்போதுமே விஷயங்களை லேசாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டவள்.

சிறு வயதிலிருந்தே பெரும்பாலான சூழ்நிலைகளை அதிகம் யோசிக்காமல், அமைதியாக அணுகுவது என்னுடைய பழக்கம்.

சினிமாவுக்குள் வரும் முடிவை எடுத்ததும் அம்மாவும் அப்பாவும் ஒழுக்கம் பற்றி மிகத் தெளிவாக சொல்லித் தந்திருக்கிறார்கள்.

இந்தத் துறையில் ஒழுக்கம் அவசியம் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர்.

நேரத்திற்கு முன்பாகவே சென்று சேர்வது, கொடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே இருப்பது, நீண்ட நேர ஷூட்டிங்குகளுக்கு ஏற்றவாறு சரிசெய்து கொள்வது போன்றவற்றை குறித்து எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

Urvashi Daughter - Tejalakshmi

Urvashi Daughter – Tejalakshmi

காட்சிகள் எப்படி வருகின்றன என்பதைப் பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம் என்று என் அம்மா அறிவுரை வழங்கினார்.

செட் முழுவதும் உள்ள அனைவரையும் சமமாக நடத்த வேண்டும், மரியாதை காட்ட வேண்டும், அனைத்து குழு உறுப்பினர்களையும் மதிக்க வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார்.

‘சினிமாவும் நம்முடைய வீடுதான், அதில் இருப்பவர்கள் அனைவரும் நமது குடும்ப உறுப்பினர்கள்’ என்று அவர் எனக்கு அடிக்கடி நினைவூட்டுவார்” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *