இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் சுஜித், “சிறந்த பரிசு இது! வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு உணர்ச்சி பொங்கி நிற்கிறேன்.
என் அன்புக்குரிய உண்மையான ஓஜி, பவன் கல்யாண் காருவிடம் இருந்து கிடைத்த இந்தப் பரிசு அன்பும் ஊக்கமும் தருகின்றன.
குழந்தைப் பருவத்தில் அவரது ரசிகனாக இருந்திருக்கிறேன். இன்று அவரிடம் இந்தச் சிறப்புப் பரிசு கிடைத்திருக்கிறது.
அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன்!” எனக் கூறியிருக்கிறார்.