கடைசி உலகப் போர் மற்றும் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன.
மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி.
இறுதியாக, இவரே நடித்து இயக்கிய திரைப்படம் கடைசி உலகப் போர். இப்படம் கடந்த செ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டமிருப்பதாக ஹிப் ஹாப் ஆதி தெரிவித்திருக்கிறார்.
அதே நாளில், இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இப்படத்தில் அறிமுக நாயகன் ஏகன், யோகி பாபு மற்றும் புதுமுகங்கள் நடித்திருந்தனர். திரைவெளியீட்டு முன்பாகவே, ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்கிற பெயரையும் பெற்றது.
இதையும் படிக்க: கஜினி – 2: சூர்யா, அமீர் கான் தயார்?
இந்த நிலையில், கடைசி உலகப் போர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படம் சிம்பிளி சௌத் ஓடிடியிலும் இன்று வெளியாகியுள்ளன.