ஓடிடியில் கூலி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

dinamani2F2025 08 132Ffw9t91592FGyOXzkTXsAA30l
Spread the love

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

கூலி

GyOXzkTXsAA30l

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் காணக் கிடைக்கிறது.

மீஷா

kathir

நடிகர் கதிர் மலையாளத்தில் அறிமுகமான மீஷா திரைப்படம் ஆஹா தமிழ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் நாளை(செப். 12) வெளியாகிறது. எம்சி ஜோசப் இயக்கிய இந்தப் படத்தில் ஷைன் டாம் சாக்கோ, ஆண்டனி வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பன் பட்டர் ஜாம்

Untitled 1 copy

பட்டர் ஜாம் திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. நடிகர் ராஜு பிரதான பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். சுரேஷ் சுப்ரமணியம் கதை எழுதியிருக்கிறார்.

பகாசுரா ரெஸ்டாரண்ட்

ret

தெலுங்கு மொழிப்படமான பகாசுரா ரெஸ்டாரண்ட் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. நகைச்சுவை கலந்த திரில்லர் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சயாரா

saira

மோஹித் சூரி இயக்கியுள்ள அஹான் பாண்டே, அனீத் பத்தா ஆகியோர் நடிப்பில் வெளியான காதல் திரைப்படமான சயாரா, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

இப்படங்கள் அல்லாமல் ’சூ ஃப்ரம் சோ’, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் ‘சரண்டர்’ திரைப்படம், சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் ‘கண்ணப்பா’ திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் காணக்கிடைக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *