ஓநாய்களில் ஒன்றின் கால் ஒடிந்து காயமடைந்திருப்பதை அதிகாரிகள் கண்டுள்ளனர். அவர்களின் கணிப்புபடி, முன்னொரு காலத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த அந்த ஓநாயை, மனிதர்கள் காயப்படுத்தியிருக்கலாம். அந்த ஓநாய் ஆல்ஃபாவாகவும், கூட்டத்தின் தலைவனாகக் கூட இருக்கலாம்.
மற்றொரு சாத்தியக்கூறு என்னவென்றால், தங்கள் குட்டிகளுக்கு மனிதர்கள் தீங்கு விளைவிப்பதைப் பார்த்த ஓநாய்கள் ஆக்ரோஷமாகியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில், ஓநாய் பாதிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களின் கதவில்லா வீடுகளில், உள்ளூர் நிர்வாகம் கதவுகளையும் அமைத்து தருகிறது; இதுவரையில், 120 வீடுகளில் கதவுகள் அமைத்து தரப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி கூறுகிறார்.
மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் முறையான வீடுகள் இல்லாதவர்களுக்காகவும், அச்சுறுத்தல் இருப்பவர்களுக்காகவும் பஞ்சாயத்து இல்லத்தை தங்கிக் கொள்ளும் இடங்களாக மாற்றியமைத்துள்ளனர்.