தனது உடல்நலன் குறித்து விசாரித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினை இன்று காலை நடைப்பயிற்சியின்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து உடல்நலன் குறித்து விசாரித்தார். இதனைத் தொடர்ந்து, மதிய வேளையில் ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன், மீண்டும் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றார்.
இவர்கள் இருவரின் சந்திப்பும் அரசியல் களத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இருப்பினும், அரசியல் நிமித்தமாக முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவில்லை என்று ஓ. பன்னீர்செல்வம் கூறிவிட்டார்.
இந்த நிலையில், ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்திருப்பது சமூக ஊடகங்களில் மீண்டும் ஓர் அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.