ஓமந்​தூரார் மருத்துவ கல்லூரி​யில் ராகிங் புகார்: தேசிய மருத்துவ ஆணையத்​திடம் அறிக்கை தாக்கல் | Complaint of ragging at omandurar medical college

1342069.jpg
Spread the love

சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதாக முதலாமாண்டு மாணவர் புகார் செய்ததால், கல்லூரி நிர்வாகம் விசாரித்து அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அனுப்பியுள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி, முதலாமாண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர் ஒருவர், பல்கலைக்கழக மானியக் குழுவின் ராகிங் தடுப்புப் பிரிவுக்கு கடந்த 26-ம் தேதி புகார் ஒன்றை இமெயில் மூலம் அனுப்பியிருந்தார். அதில், செயல்முறை பாட கையேடுகளை எழுதித் தருமாறு சீனியர் மாணவர்கள் கட்டாயப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.

அந்த புகாரின்படி, மருத்துவமனை டீன் அரவிந்த், விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை அனுப்ப முடிவு செய்தார். ஆனால், இந்த விவகாரத்தில் காவல் துறை உதவி ஆணையர் நிலையில் விசாரணையை முன்னெடுக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியதால், அந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதலுடன் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *