ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் 1,279 பேருக்கு பணப்பலன்கள் ரூ.372 கோடி நிதி அரசு ஒதுக்கீடு | cash benefits for retired transport employees

1332115.jpg
Spread the love

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற 1,279 பணியாளர்களுக்கான பணப்பலன்களை வழங்க ரூ.372 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022-ம் ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற 3,414 பனியாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை, ஓய்வுதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்காக ரூ.1031.31 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 மார்ச் மாதம் உத்தரவிட்டார். அதனடிப்படையில், போக்குவரத்து கழகங்களில் 2022 ஏப்ரல் முதல் 2022 நவம்பர் வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள் மொத்தம் 3,414 பேருக்கு பணப்பலன்களுக்காக ரூ.1031.31 கோடி வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நிதி நெருக்கடியிலும் கடந்த 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் மாதம் வரை பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கான பணப் பலன்களை வழங்க நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்தவகையில் போக்குவரத்துக் கழகங்களில் டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை பணியிலிருந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள் மொத்தம் 1,279 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக ரூ.372.06 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *