“ஓய்வூதியம் அறிவிப்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா?” – நயினார் நாகேந்திரன் | “Is the pension announcement a scam to trick JACTO Geo organizations?” – Nainar Nagendran

Spread the love

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தி.மு.க அரசின் ஆயுட்காலம் முடிவடையக் கூடிய சூழலில் ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது ஏன்? செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கை என்ன ஆனது?

ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினரை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா அல்லது பொதுமக்களை ஏமாற்றுவதற்கான அறிவிப்பா? தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், எதையும் நிறைவேற்றவில்லை.

ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு தி.மு.க-வின் வாடிக்கையான ஏமாற்று வேலை. நாளை புதுக்கோட்டையில் பா.ஜ.க யாத்திரை நிறைவு பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வைக்கும் கட்சிகளும், கூட்டணியில் சேரப் போகும் கட்சிகளும் கலந்து கொள்வார்கள்.

nayinar nagenthiran

nayinar nagenthiran
d.dixith

அமித்ஷா எப்பொழுது வந்தாலும் மாற்றத்தை உண்டு பண்ணிவிட்டுத்தான் செல்வார். என்ன மாதிரியான மாற்றங்கள் என்பது அவர் வந்து சென்ற பின்புதான் தெரியும். யார் முதலமைச்சராக வரவேண்டும் என்பதைக் காட்டிலும் யார் முதலமைச்சராகத் தொடரக்கூடாது என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

தி.மு.க ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சி. போலி மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கக்கூடிய ஆட்சி. உண்மையான மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கக்கூடிய கட்சிதான் பா.ஜ.க. நாங்கள் நிச்சயம் ஆட்சிக்கு வருவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *