ஓய்வை அறிவித்த மார்கஸ் ஸ்டாய்னிஸ்..! ரசிகர்கள் அதிர்ச்சி!

Dinamani2f2025 02 062flybg6tpp2ftnieimport20211023originalmarcusstoinisap.avif.avif
Spread the love

பிரபல ஆஸி. வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

71 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டாய்னிஸ் 1,495 ரன்கள் 48 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

35 வயதாகும் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாடி புகழ்ப்பெற்றவர். டி20 போட்டிகளில் கவனம் செலுத்த இந்த முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

பிப்.19இல் சாம்பியன்ஸ் டிராபி தொடங்கும் வேளையில் இந்த முடிவு ஆஸி. ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரில் 2025ஆம் ஆண்டுக்கான இவரை ரூ.11 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கம்மின்ஸ், ஹேசில்வுட், மார்ஷ் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் இவரது ஓய்வு முடிவு ஆஸி. அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமென கருதப்படுகிறது.

பிப்.12ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபிக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *