சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் ஸ்வாதி கொண்டே நாயகியாகவும், நியாஸ் கான் நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.
இவர்களுடன் பாரதிராஜாவின் தம்பி தேனி முருகன், ப்ரீத்தி சஞ்சீவ், பிரபாகரன் உள்ளிட்ட பலரின் நடிப்பும் மூன்று முடிச்சு தொடருக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
கிராமத்தில் தந்தையுடன் வளர்ந்த பெண், கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த நாயகனை திருமணம் செய்துகொள்ளும் சூழல் ஏற்படுகிறது. அதன்பிறகு, அக்குடும்பத்தில் நாயகி தனது கண்வருடன் சேர்ந்து சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
பிரைம் டைம் எனப்படும் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகி வருவதால், அதிகப்படியான ரசிகர்களை மூன்றூ முடிச்சு தொடர் கவர்ந்துள்ளது. டிஆர்பி புள்ளிப் பட்டியலிலும் முதல் 5 இடங்களில் ஒன்றாக உள்ளது.