ஓலா, ஊபர் மாற்று பாரத் டேக்ஸி: மத்திய அரசின் புதிய ஆப்|No Surge, No Commission: Why Bharat Taxi Is a Game Changer

Spread the love

ஓலா, ஊபர், ரேப்பிடோவிற்கு மாற்று “பாரத் டாக்ஸி’.

இது மத்திய அரசின் ஆப். இதில் ஓலா, ஊபர், ரேப்பிடோ மாதிரி கால் டாக்ஸி, ஆட்டோ, பைக் போன்றவற்றைப் புக் செய்யலாம்.

இந்த ஆப் கடந்த 5-ம் தேதியில் இருந்து டெல்லி, குஜராத் போன்ற பகுதிகளில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

2029-ம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் இந்த ஆப் செயல்பாட்டிற்கு வர‌வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்காக உள்ளது.

மற்ற ஆப்களைக்‌ காட்டிலும் இதில் என்ன ஸ்பெஷல்?

பிற ஆப்களில் டிரைவர்கள் ஒவ்வொரு ரைடிற்கும் 20 – 30 சதவிகிதம் கமிஷன்‌ கட்ட வேண்டும்.

ஆனால், இந்த ஆப்பில் அப்படி எந்தக் கமிஷனும் கட்ட வேண்டியதில்லை.

இதனால், டிரைவர்களுக்கும் லாபம்… கமிஷன் குறைவதால் பயணிகளுக்குக் கட்டணம் குறையும். இது பயணிகளுக்கும் லாபம்.

பிற ஆப்களில், பீக் நேரங்கள், மழையின் போது கட்டணங்கள் அதிகரிக்கும்.

ஆனால், பாரத் டாக்ஸியில் இந்தப் பிரச்னைகள் இல்லை.

இந்த ஆப்பில் கட்டணங்கள் நடைமுறைகளுக்கு உட்பட்டே நிர்ணயிக்கப்படும்.

பாரத் டாக்ஸியைப் பொறுத்தவரை, டிரைவர்கள் பார்ட்னர்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *