ஓவுலேஷன் நாள் எப்போது? முன்கூட்டியே அறியும் டெஸ்ட், கருவிகள் மற்றும் கருத்தரிப்பு வாய்ப்பு உண்மையா? | Is it possible to predict the fertile day/period in advance?

Spread the love

அடுத்தது ‘ஃபாலிக்குலர் ஸ்டடி’ (follicular study) முறை. சம்பந்தப்பட்ட பெண்ணை, பீரியட்ஸின் 12-வது நாள் முதல் ஒருநாள் விட்டு ஒருநாள் வரச் சொல்லி, ஸ்கேன் செய்து, கருமுட்டை வளர்கிறதா, எப்படி வளர்கிறது என்பது கண்காணிக்கப்படும். 

அந்த முட்டையானது, 2 முதல் 2.1 செ.மீ அளவு வளர்ந்துவிட்டால், அண்டவிடுப்பு நிகழும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இப்படி அண்டவிடுப்பு நிகழ்வதை உறுதிசெய்துகொண்டு, அந்த நாள்களில் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இதை மருத்துவ மொழியில் ‘ஃபெர்ட்டைல் விண்டோ’ (Fertile Window) என்று சொல்வோம்.

மருத்துவ கண்காணிப்பு

மருத்துவ கண்காணிப்பு

அதாவது ஓவுலேஷன் நிகழ்வதற்கு நான்கு நாள்கள் முன்பும், ஓவுலேஷன் நிகழும் நாள் அன்றும், ஓவுலேஷன் நடந்த ஒரு நாள் கழித்தும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள்.

முட்டையானது ஒரு நாள் மட்டுமே உயிருடன் இருக்கும். அதுவே, உயிரணுவானது 3 முதல் 4 நாள்கள் வரை உயிருடன் இருக்கும்.  அதனால்தான் இந்தக் கணக்கு.

இப்போது நிறைய பெண்கள் மென்ஸ்டுரல் ஆப் பயன்படுத்துகிறார்கள். பீரியட்ஸ் ஏற்படும் தேதியை அதில் தொடர்ந்து பதிவு செய்து வந்தால், அதுவே, உங்களுக்கான ‘ஃபெர்ட்டைல் விண்டோ’வை கொடுக்கும். வெஜைனா கசிவு எப்படியிருக்கும், வேறு எப்படிப்பட்ட உணர்வுகள் இருக்கும் என சில அறிகுறிகளையும் உங்களுக்குச் சொல்லும். எனவே, அதையும் பயன்படுத்தலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *