சறுக்களில் தொடங்கிய யுத்தம்!
”அவர் கட்சிக்கு விசுவாசமானவரா நடித்திருக்கிறாரோ என எண்ண தோன்றுகிறது. ஜெயலலிதா ஆட்சியில இல்லாத போது அவருடைய நாற்காலியைப் பயன்படுத்த மாட்டேன்னு சொன்னதெல்லாம் நடந்துச்சு தான். அவருடைய உண்மையான கட்சிப் பாசம், சுயரூபம், போலி விசுவாசம் எல்லாமே ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் வெளிச்சத்துக்கு வந்தது. அம்மா உடல்நிலை சரியில்லாத போது முதல்வரானார், சரி. அவங்க மறைஞ்சதும் அந்த சூழலைப் பயன்படுத்தி டெல்லி கட்சிக்குள் குழப்பத்தை உண்டாக்குச்சு. தங்களுக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்காதான்னு அவங்க பார்த்தாங்க.. அந்தச் சூழல்ல இவர் என்ன செய்தார்?
கட்சியின் நலன் முக்கியம்னு நின்றிருக்க வேண்டாமா? ‘என்னை ராஜினாமா செய்யச் சொல்றாங்க’ன்னு பொதுவெளியில சசிகலா பத்திப் பேசினாரே, இவருக்கு அடையாளம் தந்ததே இதே சசிகலாதானே? அவர் நினைக்கலையே, அந்த இடத்துல இவரது விசுவசம் கேள்விக்குள்ளாச்சி . அன்னைக்கு கட்சிக்குச் சம்பந்தமில்லாத சிலர் பேச்சையல்லவா கேட்டுட்டு ‘தர்ம யுத்தம்’ அது இதுன்னு போய் உட்கார்ந்தார்.
ஒருவேளை சசிகலா ராஜினாமா செய்யச் சொன்னதும் ஜெ.,-வுக்காக ராஜினாமா செய்தது போலவே பதவியை விட்டு விலகியிருந்தா, ஜெயிலுக்குப் போகும் முன் சசிகலா இவரையே முதல்வராக்கி விட்டுப் போயிருந்திருக்கலாம்… எடப்பாடி பழனிசாமியின் என்ட்ரியே நிகழாமல் போயிருந்திருக்கக்கூட வாய்ப்பிருக்கு.
ஒருவேளை, கட்சி முழுக்க அவர் கட்டுப்பாட்டுல போயிருந்தா வடக்கிலிருந்து என்ன செய்யச் சொல்றாங்களோ அதையெல்லாம் செய்து கட்சியை ஒரு வழி பண்ணியிருப்பார்.